ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கெளதமிபுத்ர சட்டகர்னி படத்தை அடுத்து பாலகிருஷ்ணா நடித்து வந்த படம் பைசா வசூல். பூரி ஜெகன்னாத் இயக்கிய இந்த படத்தில் ஸ்ரேயா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்த நிலையில், பின்னர் முக்கிய பாடல், சண்டைகாட்சிகளுக்காக போர்ச்சுக்கல் சென்று படமாக்கி வந்தனர்.
படப்பிடிப்பு எல்லாம் முடிந்த நிலையில் பைசா வசூல் படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக்குழுவினருக்கு படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்களாம். இதையடுத்து, செப்டம்பர் 1-ந்தேதி பைசா வசூல் படத்தை வெளியிடுவதை உறுதி செய்துள்ளனர். பைசா வசூலை தொடர்ந்து பாலகிருஷ்ணா, கேஎஸ் ரவிக்குமாரின் படத்தில் நடித்து வருகிறார்.