Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக் பாஸ் - உரையாடலைப் புறக்கணித்த கமல்ஹாசன்

20 ஆக, 2017 - 12:19 IST
எழுத்தின் அளவு:
Kamalhassan-avoid-to-talk-with-bigboss-contestants

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறிய பிறகு இந்த நிகழ்ச்சியை மக்களைத் தொடர்ந்து பார்க்க வைக்க பல முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், முன்பிருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஏதாவது புதிதாகச் செய்து நிகழ்ச்சிக்கான வரவேற்பைத் தக்க வைத்துக் கொள்ள கடந்த வாரத்தில் மட்டும் மூன்று புதிய போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பினார்கள். ஆனாலும், கொஞ்சமும் பிரபலம் இல்லாத அந்த போட்டியாளர்களால் நேயர்களிடம் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை. அதை வாரம் இருமுறை வரும் கமல்ஹாசன்தான் காப்பாற்ற வேண்டிய நிலை.

நேற்று அதைச் சரியாகவே செய்தார் கமல்ஹாசன். ஈடுபாடு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் மிகச் சிறந்தவை. “இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டும் என்று வந்த பிறகு நான் முழு ஈடுபாட்டுடன் அதைச் செய்து வருகிறேன். நீங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வந்தீர்கள். ஆனால், அதை ஈடுபாட்டுடன் செய்வது போலத் தெரியவில்லை. உங்களை நம்பி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தால் பாதியில் ஓடி விடுவீர்கள் போலிருக்கிறதே?,” என போட்டியாளர்களைப் பார்த்து கடும் கோபத்துடன் சொன்னார்.


மைக்கை மூடிக் கொண்டு பேசுவது, கழட்டி வைத்துவிட்டுப் பேசுவது, டாஸ்க்குகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது, பிக் பாஸ் அழைத்துப் பேசினால் அவரை அவமரியாதை செய்வது என போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை கடுமையாகச் சுட்டிக் காட்டிவிட்டு, இப்படி பொறுப்பற்று இருக்கும் உங்களுடன் பேச விருப்பமில்லை என அவர்களிடம் சொல்லிவிட்டு அவர்களுடன் உரையாடும் நிகழ்வு வேண்டாம் என கட் செய்யச் சொன்னார். ரைசா, காயத்ரி தவிர ஏனைய போட்டியாளர்கள் அவர்கள் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டனர். ரைசா, நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். காயத்ரி அது கூட சொல்லாமல் அமைதி காத்தார்.


அதன் பின், புதிதாக போட்டிக்குள் வந்த சுஜா, ஹரிஷ், காஜல் ஆகியோரிடம் மட்டும் தனித் தனியாக உரையாடினார் கமல்ஹாசன். நேயர்கள் கேட்ட கேள்விகளை புதிய போட்டியாளர்கள் மூலம், பழைய போட்டியாளர்களிடம் கேட்க வைத்தார். நேயர்களின் பல கேள்விகள் வெளிப்படையாக இருந்தன. இருந்தாலும் கோபப்படாமல் போட்டியாளர்கள் அவற்றிற்கு பதிலளித்தனர்.


எவிக்ஷனில் இருப்பதால்தான் ரைசா, காயத்ரி கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது. இன்றாவது அவர்கள் மன்னிப்பு கேட்பார்களா ?, கமல்ஹாசன் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவாரா ?, இன்று வெளியேறப் போது காயத்ரியா ?, என்ற ஆர்வத்துடன் இன்றைய நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


Advertisement
கேட்டுக் கொண்ட விஜய், வருத்தம் தெரிவித்த அஜித்கேட்டுக் கொண்ட விஜய், வருத்தம் ... ஆளப்போறான் பாடல் வரிகள் உண்மையாக வேண்டும் : ஏ.ஆர்.ரஹ்மான் ஆளப்போறான் பாடல் வரிகள் உண்மையாக ...


வாசகர் கருத்து (7)

ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
20 ஆக, 2017 - 22:39 Report Abuse
ilicha vaay vivasaayi (sundararajan) வேற வேலையே இல்லையா கொசு தொல்லை தாங்க முடியல
Rate this:
Subramania Bhattar - madurai,இந்தியா
20 ஆக, 2017 - 19:27 Report Abuse
Subramania Bhattar அடாடா என்ன நடிப்பு சரியான நடிகன் தான் அய்யா இந்த நடிகன் .இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் காதிலே எல்லாம் பூ
Rate this:
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
20 ஆக, 2017 - 19:06 Report Abuse
Sukumar Talpady ஒரு நல்ல நாடகத்தை நடத்தி காட்டினார் திரு கமல ஹாசன் .
Rate this:
Madhu Arumugam - Kumarapalayam,இந்தியா
20 ஆக, 2017 - 14:27 Report Abuse
Madhu Arumugam இப்படியே உசுப்பேத்தி விடுங்க...
Rate this:
vnatarajan - chennai,இந்தியா
20 ஆக, 2017 - 14:24 Report Abuse
vnatarajan பிக் பாஸ் வெறும் ஒரு ஸ்மால் பாக்ஸ் தான் அவ்வளவு இன்டெரெஸ்டிங்காக இல்லை வீட்டில் குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்ப்பதற்கு தகுதியில்லை ஆகையால் நிறுத்திவிடுவது நல்லது
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in