Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேட்டுக் கொண்ட விஜய், வருத்தம் தெரிவித்த அஜித்

20 ஆக, 2017 - 12:09 IST
எழுத்தின் அளவு:
Vijay,-ajith-statement-on-fans-war-in-social-media

வருத்தம், வேண்டுகோள், மன்னிப்பு, ஆகிய வார்த்தைகளுக்கு தனித்தனி அர்த்தம் உண்டு. கடந்த சில வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் திரைப்பட நடிகர்களின் ரசிகர்களுக்குள் பல கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையேதான் இந்த மோதல்கள் அதிகம் நடந்து வருகின்றன. அதிலும் இருவரது படங்களும் அடுத்தடுத்து வெளிவரும் போது அந்த மோதல்கள் தாறுமாறாகவும் இருக்கும். அப்படி ஒரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. 'விவேகம், மெர்சல்' ஆகிய படங்களின் செய்திகளும், வீடியோக்களும் அதற்கு ஒரு காரணம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜய் நடித்த 'சுறா' படத்தைப் பற்றி பெண் பத்திரிகையாளர் ஒருவர் டிவிட்டரில் கருத்து தெரிவிக்க அதைத் தொடர்ந்து அவரை விஜய் ரசிகர்கள் பலரும் தரக்குறைவாக விமர்சித்தார்கள். இரண்டு நாட்கள் கழித்து விஜய் சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் 'பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார் விஜய். ஆனால், அவரது ரசிகர்கள் செய்த செயலுக்காக அவருடைய அறிக்கையில் எந்த ஒரு வருத்தமோ, மன்னிப்போ அதில் இல்லை. பொதுவாக பெண்மையைப் போற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார். டிவிட்டரில் நடந்த அந்தப் பிரச்சனை பற்றி சிறிதும் அவர் குறிப்பிடவில்லை.


அதே சமயம் நேற்று அஜித் சார்பாக அவருடைய சட்ட ஆலோசகர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் சில நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள், மற்றவர்களை சமூக வலைத்தளங்களில் அஜித்தின் கருத்தாக பிரகடனப்படுத்தி வருகிறார்கள். அது அஜித்திற்கு கடும் மன உளைச்சலைத் தருகிறது. இவர்களது செயல்களால் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் அஜித் தன் மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்,” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்காக அஜித் அவருடைய மனவருத்தத்தை சட்ட ஆலோசகர் மூலமாவது வெளிப்படுத்தியிருக்கிறார்.


இப்போதாவது அஜித், விஜய் இருவரும் சமூக வலைத்தள சண்டைகள் பற்றி அவர்களது நிலையை வெளிப்படுத்தினார்களே என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சிதான்.


Advertisement
ரஜினியின் 2.ஓ ரிலீஸ் தேதி மாறுகிறதா?ரஜினியின் 2.ஓ ரிலீஸ் தேதி மாறுகிறதா? பிக் பாஸ் - உரையாடலைப் புறக்கணித்த கமல்ஹாசன் பிக் பாஸ் - உரையாடலைப் புறக்கணித்த ...


வாசகர் கருத்து (4)

Ashokraj Raja - chennai,இந்தியா
20 ஆக, 2017 - 15:43 Report Abuse
Ashokraj Raja சினிமா மோகத்தின் பிடியில் நமது முட்டாள் மக்கள் ....................எந்த ஹீரோவும் ஒரு வெங்காயமும் செய்ய முடியாது .........நம்மை போலவே அவர்கள் ......ஒரு செயலை மிகை படுத்தி பார்ப்பதன் விளைவு தான் இது
Rate this:
Padhu -  ( Posted via: Dinamalar Android App )
20 ஆக, 2017 - 12:50 Report Abuse
Padhu Who ever please support for our Tamil people first. This century Tamil people only starting achievements. Please encourage for us first.
Rate this:
20 ஆக, 2017 - 12:48 Report Abuse
KrishnaMurthy அது உனக்கு தான்போல இருக்கு
Rate this:
20 ஆக, 2017 - 12:37 Report Abuse
குறிஞ்சி நில கடவுள் ம்.. எல்லா பிரச்சினையும் solve ஆகிடிச்சி...பங்குசந்தை,அன்னிய செலவானி,களவானி எல்லாம் உயரப்போது...நாடு விஜயகாந்த் ஆகபோற நேரம் வந்துரிச்சி oh sorry வல்லரசு ஆக போகுது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in