ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.ஓ. அக்சய்குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும், 2.ஓ படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந்தேதி வெளியிடு வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் எதிர்பார்த்தபடி முடிவடையாததால் 2.ஓ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக ஒரு செய்தி பரவியிருக் கிறது. இதையடுத்து அப்படத்தின் தயாரிப்பாளரான ராஜூ மகாலிங்கம், 2.ஓ இறுதிகட்ட பணிகள் பல நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், படத்தை வெளியிட்டு திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந்தேதி 2.ஓ படம் ரிலீஸ் ஆகி விடும். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள் ளார்.