‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சல்மான் கான் படம் என்றால் வசூலுக்கு உத்தரவாதம் இருக்கும். ஆனால்
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான டியூப்லைட் படம் அந்த உத்தரவாதத்தை
தகர்த்துவிட்டது. சல்மான் ஒரு மாறுதலுக்காக வித்தியாசமாக நடித்தது அவரது
ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. இதனால் படம் தோல்வியை தழுவியுள்ளது.
படம்
வெளியான இதுநாள் வரை சுமார் ரூ.120 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது.
இன்னும் ரூ.20 கோடி வசூலித்தால் மட்டுமே படம் ஓரளவுக்கு தப்பிக்கும்.
ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை. ஸ்ரீதேவி நடித்த மாம் படம் ரிலீஸாகி நல்ல
வரவேற்பை பெற்றுவிட்டதால் பல தியேட்டர்களில் டியூப்லைட் படத்தை
தூக்கிவிட்டார்கள்.
இந்நிலையில், டியூப்லைட் படத்தால்
விநியோகஸ்தர்களுக்கு சுமார் ரூ.50 முதல் 55 கோடி வரை நஷ்டம்
ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளரான சல்மானை
முற்றுகையிட விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளனர். விநியோகஸ்தர்களின்
நிலையை புரிந்து கொண்டு சல்மானும் அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை திருப்பி
தர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.