ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் வெற்றிப்படங்களில் நடித்திருந்தபோதும் இன்னமும் தனது நடிப்பால் பெரிய அளவில் ரசிகர்களை இம்பரஸ் பண்ணவில்லை கீர்த்தி சுரேஷ். ஆனால் தெலுங்கில் நடித்த நேனு சைலஜா படத்தில் அங்குள்ள பெருவாரியான ரசிகர்களை கவர்ந்து விட்டார். அந்த அளவுக்கு அழுத்தமான கதாபாத்தில் நடித்திருக்கிறார். சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் மகாநதி படத்தில் சாவித்ரியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கும் அந்த நேனு சைலஜா படம்தான் காரணமாம்.
இந்த நிலையில், பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஆர்கா மீடியா ஒர்க் நிறுவனம், சர்வானந்த்தை நாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. அந்த படத்தில் கதாநாயகிக்கு தான் பிரதான வேடமாம். அதனால் தற்போதைய நடிகைகளில் சிலரது பெயரை பரிசீலித்து வந்தவர்கள், இப்போது கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். கைவசமுள்ள படங்களில் முடித்ததும் சர்வானந்துக்கு ஜோடியாக நடிக்க கால்சீட் கொடுத்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.