‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கதாநாயகனாக பல படங்களில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம், வேறு ஹீரோ நடிக்கும் படங்களில் சிறிய வேடத்தில் நடிக்க அசாத்திய தைரியமும் பெருந்தன்மையும் வேண்டும். விஜய்சேதுபதிக்கு இந்த இரண்டுமே இருக்கின்றன. அதனால்தான் அவ்வப்போது சின்ன வேடங்களில் முகம் காட்டுகிறார்.
இதற்கும் மேலாக அண்டாவக்காணோம் படத்தில் அண்டாவுக்கு குரல் கொடுக்கிறார். விஜய்சேதுபதி வழியில் விதார்த்தும் நடைபோடுகிறார். இருவருமே கூத்துப்பட்டறையிலிருந்து வந்தவர்கள் என்பது ஒற்றுமை. 'குட்டிப்புலி' முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் 'கொடிவீரன்' படத்தில் விதார்த்தும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணா என மூன்று கதாநாயகிகள் நடிக்கும் இப்படத்தில் வில்லனாக நடிக்க 'மதயானைக் கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் நடித்து வருகிறார். மூன்று நாயகிகளில் மகிமா நம்பியார் சசிகுமாரின் ஜோடியாக நடிக்க, சசியின் தங்கையாக சனுஷா நடிக்கிறாராம்.
சசிகுமாரின் சொந்தக்காரப் பெண்ணாக பூர்ணா நடிக்கிறாராம். மே 10ஆம் தேதி முதல் படப்பிடிப்பு மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.