ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒருபக்கம் பேய் சீசன் தமிழ் சினிமாவை மட்டுமல்ல, மலையாள சினிமாவையும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து கொஞ்சம் விலகி பாம்பு சீசனை ஆரம்பித்து வைத்துள்ளது 'E'' மலையாள படம். குக்கு சுரேந்திரன் என்பவர் இயக்கத்தில் 'E' என்கிற ஒற்றை எழுத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தில் பாட்டு டீச்சராக நடிக்கிறார் கௌதமி. அதுமட்டுமல்ல கிட்டத்தட்ட பதினான்கு வருடங்கள் கழித்து மீண்டும் மலையாள திரையுலகில் நுழைந்துள்ளார் கௌதமி..
இந்தப்படத்தில் அல்சீமர் என்கிற ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டவாரக இவரது கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாம். சமீபத்தில் இந்தப்படத்தின் டீசர் வெளியானது, டீசரை பார்க்கும்போது இது பேய்ப்படம் என்பதைவிட பாம்பு தான் படத்தில் பிரதானமாக இருக்கிறது என்பதும், த்ரில்லுக்கு பஞ்சமே இருக்காது என்பதும் நன்றாகவே தெரிகிறது. இந்தப்படம் ஆக-11ஆம் தேதி ரிலீஸாகிறது.