‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டில் பிரபல நடிகர் நீல் நிதின் முககேஷ். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த கத்தி படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் சாகோ படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானநிலையில், இப்போது கன்னடத்திலும் கால்பதிக்க இருக்கிறார் நீல். கன்னட இயக்குநர் கோமல் இயக்கும் புதிய படத்தில் நீல் நிதின், வில்லனாக நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து இயக்குநர் கோமல் தரப்பில் கூறியிருப்பதாவது... "எங்களது படத்தில் ஒரு வித்தியாசமான ரோலில் நீல் நடிக்க உள்ளார். எங்களது படத்தில் அவர் நடிப்பது த்ரில்லாக இருக்கிறது. அவர் ஒரு சிறந்த நடிகர், விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.