ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஆஸ்கர் விருது வென்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த இயக்குனர் மஜித் மஜிதி தற்போது இயக்கி வரும் 'பியான்ட் தி கிளவுட்ஸ்' (Beyond The Clouds) படத்தை தமிழிலும் உருவாக்க உள்ளார். இந்தியாவில் படமாக்கப்படும் இந்தப் படத்தை முதலில் ஹிந்தியில் மட்டுமே தயாரிக்க இருந்தார்கள். தற்போது உலக அளவில் திரையிட ஆங்கில மொழியிலும், கூடுதலாக தமிழ் மொழியிலும் தயாரிக்க உள்ளனர்.
படத்தை தமிழில் டப்பிங் செய்யாமல் நேரடியாகவே தமிழில் படமாக்க உள்ளார்கள். படத்தின் கதையில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் ஆகியவற்றைப் பேசும் கதாபாத்திரங்களும் கலந்து இருப்பதால் மஜித் மஜிதி இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதற்காக தமிழ் பேசக் கூடிய சில நடிகர்களையும் அவர் படத்திற்காகத் தேர்வு செய்ய உள்ளார். பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூரின் தம்பி இஷான் கட்டர், மலையாள நடிகை மாளவிகா மோகனன், பழம்பெரும் நடிகை ஜி.வி.சாரதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மஜித் மஜிதியின் இந்தப் படம் தமிழிலும் வெளிவருவது தமிழ்த் திரையுலகத்திற்குப் பெருமையான ஒரு விஷயம்.