‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமூக வலைத்தளங்கள் இன்றைய திரையுலக நட்சத்திரங்களுக்கு 'புகழ்' சார்ந்த ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதன் மூலம் அவர்களது ரசிகர்களுடன் நேரடியாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம். இருந்தாலும் அனைவருமே அப்படி செய்வதில்லை. அதைத் தங்களைப் பற்றிய விளம்பரம் சார்ந்த ஒரு கருவியாகவே பார்க்கிறார்கள்.
சிலருக்கோ அது அந்தஸ்து, இமேஜ் சார்ந்த ஒரு விஷயமாகத் தெரிகிறது. தங்களை எத்தனை பேர் பாலோ செய்கிறார்கள். தாங்கள் பதிவிடும் கருத்துக்களை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள், எத்தனை பேர் அதை மீண்டும் பதிவிடுகிறார்கள் என்பது ஒரு அளவு கோலாகவே பார்க்கப்படுகிறது. சாதாரண மக்களே தங்களுக்கு எவ்வளவு லைக் வருகிறது எனப் பார்க்கும் போது, பிரபலங்கள், அதிலும் திரைப் பிரபலங்கள் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது.
தமிழ்த் திரையுலகத்தில் குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோக்களில், வியாபாரம் சார்ந்த ஹீரோக்களில் ஒருவராக முன்னேறியிருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கான நட்சத்திர அந்தஸ்து கிடைக்க முக்கியக் காரணம் யு டியூப் போன்ற வீடியோ, வலைதளங்கள்தான். அவருடைய டிவி நிகழ்ச்சிகள் அதில் மிக அதிகமாக பார்வையிடப்பட்டு அவரை ஒவ்வொரு மக்களிடமும் கொண்டு போய்ச் சேர்த்தது. அதை அப்படியே அழகாக அவர் பயன்படுத்திக் கொண்டார்.
டிவிட்டரில் அதிக பாலோயர்களை ஆரம்பத்திலிருந்தே பெற்று வந்த சிவகார்த்திகேயன் தற்போது 3 மில்லியன் பாலோயர்களைக் கடந்துள்ளார். நடிகர்களில் இதற்கு முன் தனுஷ், ரஜினிகாந்த் ஆகியோர் மட்டுமே 3 மில்லியன் பாலோயர்களைக் கடந்துள்ளார்கள். அவர்களுக்கு அடுத்து இப்போது சிவகார்த்திகேயன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தனுஷ் 4.74 மில்லியன், ரஜினிகாந்த் 3.87 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ளார்கள். நடிகைகளில் சமந்தா 3.8 மில்லியன், த்ரிஷா, 3.49 மில்லியன், இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரகுமான் 14.2 மில்லியன், அனிருத் 3.04 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ளார்கள்.