Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழகம் முழுக்க விவரங்களை திரட்டித் தாங்க...! - ரசிகர்களுக்கு ரஜினி உத்தரவு

19 மே, 2017 - 18:10 IST
எழுத்தின் அளவு:
Rajini-request-to-fans-to-collect-various-details

அரசியலில் இறங்குவது குறித்து தனக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் ஆர்வம் குறித்து, ரசிகர்களை தொடர்ச்சியாக சந்திக்கத் துவங்கி இருக்கும் நடிகர் ரஜினி, தமிழகத்தின் தேவைகள் குறித்து நிறைய விஷயங்களை சேகரித்து தருமாறு, தன்னை சந்தித்த ரசிகர்களிடம் கூறியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.


கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், தன்னுடைய ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினி, அவ்வப்போது, ரசிகர்களை சந்திப்பதாக அறிவிப்பு வெளியிட்டு விட்டு, அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்து வந்தார். ஆனால், ரஜினியை எப்படியாவது சந்தித்து, அவரை வலியுறுத்தி, அரசியலுக்குள் அழைத்து வந்து விட வேண்டும் என்று தவம் கிடந்த ரசிகர்களின் வாழ்க்கை வீணானதே தவிர, பெரிதாக எதுவும் நடந்து விடவில்லை.


ஆனால், அவ்வப்போது மேடை கிடைக்கும் போதெல்லாம், ரஜினி, தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து, பூடகமாக சில விஷயங்களை மட்டும் சொல்லி விட்டு செல்வதை வாடிக்கையாக்கி வைத்திருந்தார். இதனால், ரஜினி இனி அரசியலுக்கு வர மாட்டார் என, ரசிகர்கள் உறுதியாக முடிவெடுக்க முடியாமல் தவித்து வந்தனர்.


இந்நிலையில், திடீரென தமிழகத்தில் உள்ள தன்னுடைய ரசிகர்கள் பலரையும் சென்னைக்கு வரவழைத்து அவர்களை சந்திப்பதோடு, புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடத்தியுள்ளார். அப்போது, அவர்களிடம் பேசும் ரஜினி, விரைவில் தான் அரசியலில் ஈடுபட தயாராக இருப்பதாக சொல்லி, அவர்களை உற்சாகப்படுத்துகிறார். ஆனால், எப்போது அரசியல் பிரவேசம் என்பது குறித்து மட்டும் எந்தத் தகவலும் வெளியிடவில்லை.


இப்படி ரசிகர்களிடம் பேசும்போது, அவர்களுக்கு சில அசைன்மெண்ட்களையும் ரஜினி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ரஜினி ரசிகர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:


நீண்ட காலத்துக்குப் பின் ரஜினியை சந்தித்ததில் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. அவர், தான் எப்படியும் அரசியலில் குதிப்பேன் என்று சொல்லி உள்ளார். அதனால், ரசிகர்கள் அனைவரும் சந்தோஷமாக உள்ளோம். அரசியலில் இறங்குவதற்கு முன், சமூக ரீதியில் அவர் சில விஷயங்களை செய்து விட்டு, அதன் பின், தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதற்காக தமிழகம் முழுக்க சில விவரங்களை திரட்டச் சொல்லி எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் திரட்டச் சொல்லியிருக்கும் விவரங்கள்:


* தமிழகத்தில் நிலவும் வறட்சியைப் போக்க என்ன செய்யலாம்? நிபுணர்களின் கருத்துக்கள்...


* உள்ளாட்சி அமைப்புகள் எந்த அளவுக்கு சுதந்திரமாக தமிழகத்தில் செயல்படுகின்றன?


* ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக அளவில் ஊழல் செய்யும் அதிகாரி யார்? அரசியல்வாதி யார்?


* ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மதுக்கடைகள் எவ்வளவு? விற்பனை அளவு எவ்வளவு?


* ஒவ்வொரு மாவட்டத்திற்குமான நீர் ஆதாரம் என்ன? நிதிகள் என்னன்ன? எந்தந்த பகுதிகளில் உள்ள நதிகளில் எந்த மாதங்களில் எவ்வளவு தண்ணீர் வருகிறது?


* நிலத்தடி நீர்மட்டத்தின் நிலை என்ன?


* எத்தனை அடிக்கு போர் போட்டால் தண்ணீர் கிடைக்கிறது?


* தென்னக நதிகளை இணைக்க சாத்தியப்படும் திட்டங்கள் குறித்து நிபுணர்கள் கருத்து...


* நேர்மையாக செயல்படும் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு...


* உங்கள் மாவட்டங்களில் எந்த சினிமா நடிகர் பிரபலமாக உள்ளார்?


* நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால், மக்கள் மன நிலை எப்படி இருக்கும்?


* மாநில அரசின் செயல்பாடு; மத்திய அரசின் செயல்பாடு எப்படி?


* எதிர்கட்சியினர் செயல்பாடு குறித்து மக்கள் நினைப்பது என்ன?


இப்படி பல்வேறு விவரங்களை திரட்டித் தர ரஜினி பணித்துள்ளார். ஊருக்குச் சென்றதும், இந்த விவரங்களெல்லாம் திரட்டி அனுப்பப்படும். இதையெல்லாம் வைத்து, அவர் தமிழகத்தின் நலன்களுக்காக நிறைய கோரிக்கைகளுடம் பிரதமர் மோடியை சந்திக்கவும் திட்டம் வைத்திருப்பதாகவும் பேச்சினிடையே தெரிவித்தார்.


இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
ரஜினியின் அரசியல் போர் பேச்சு...! - தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்.?ரஜினியின் அரசியல் போர் பேச்சு...! - ... என் மகளை கடத்தவில்லை, காப்பாற்றி அழைத்து வந்தேன்: வனிதா விளக்கம் என் மகளை கடத்தவில்லை, காப்பாற்றி ...


வாசகர் கருத்து (69)

Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
22 மே, 2017 - 14:23 Report Abuse
Ramshanmugam Iyappan ஜெயா இருக்கும் வரையில் பெட்டி பாம்பாக அடங்கியிருந்தார், இப்போது பிஜேபி தமிழ்நாட்டில் குட்டையை குழப்பி மீன் பிடிக்க முயற்சி..இது ஒருபோதும் பலிக்காது..இனி சிங்கம் போல ஓர் தமிழன் அரியணை ஏறுவர். பொறுத்திருந்து பாருங்கள்...இது காலத்தின் கட்டாயம்..பிஜேபி யின் கொட்டம் அடக்க படும் நாள் விரைவில்.....
Rate this:
Raj - Sheffield,யுனைடெட் கிங்டம்
22 மே, 2017 - 05:25 Report Abuse
Raj இதில் முக்கால் வாசிக்கு மேல் RTI போட்டாலே கிடைத்திடும் . இதை கூட செய்ய முடியாம , இந்த வேலையெல்லாம் மத்தவங்க செஞ்சிட்டா இவர் என்ன உக்கார்ந்து வெல்லம் சாப்பிட்டிட்டு இருப்பாரா ?
Rate this:
Stalin - Kovilpatti,இந்தியா
21 மே, 2017 - 10:53 Report Abuse
Stalin நானும் ரஜினி இரசிகன் தான் நீங்க தயவு செய்து அரசியலுக்கு வர வேண்டாம் , ஆன்மிகத்தில் போங்க எங்களுக்கு என்றும் வெளிக்காட்டிய இருங்க . அரசியல் வேண்டாம்
Rate this:
Stalin - Kovilpatti,இந்தியா
21 மே, 2017 - 10:52 Report Abuse
Stalin நானும் ரஜினி ரசிகன் தான் .. உங்களுக்கு அரசியல் வேண்டாம் , ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் தவறை சுட்டி காட்ட தயங்கும் நீங்க வரவே வேண்டாம் .. பணம் தான் உங்களுக்கு முக்கியம்., எங்களை எப்போதும் தள்ளி வைத்தே பார்க்கிறிங்க , இந்த சந்திப்பு கூட மத்திய அரசு சொல்லிதான் நடத்தப்பட்டது ..
Rate this:
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21 மே, 2017 - 10:45 Report Abuse
Venki அய்யா நீங்கள் மிக்க நல்லவர்தான் தயவு செய்து தமிழகத்தை விட்டு விடுங்கள் தமிழர்கள் இறை பக்தி நிறைந்தவர்கள் தான் ஆனால் அதே சமயம் தமிழ் இலக்கியங்களை நாங்கள் படித்த வரையில் தமிழர்கள் சிறப்பாகவே ஆட்சி புரிந்துள்ளார்கள் தமிழ் மக்கள் இனி தன் தலைவன் தவறு செய்ய அனுமதிக்க மாட்டார்கள் நீங்கள் உங்கள் சொந்த வேலைகளை கவனியுங்கள் ஏதோ உங்களை விட்டால் வேறு ஆளே இல்லை என்பதுபோல பேசுகிறீர்கள் அதே சமயம் ஆண்டவனிடத்தும் நெருங்கிய தொடர்பில் உள்ளீர்கள் ஒரு நாள் நான் இந்திர லோகத்திலிருந்து இப்பொழுதுதான் வருகிறேன் என்று கூறுவீர்கள்
Rate this:
மேலும் 64 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Traffic Ramasamy
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in