ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பல வருடங்களாக ரசிகர்களை சந்திக்காத ரஜினி, கடந்த சில தினங்களாக சென்னையிலுள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்டம் வாரியாக ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்தார். இந்த நிலையில், ரெமோ படத்தை அடுத்து மோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயனும் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்திருக்கிறார்.
ஆனால் ரஜினியைப்போன்று தமிழகத்திலுள்ள ரசிகர்களை சந்திக்கவில்லை. தற்போது அவர் நடித்து வரும் வேலைக்காரன் படப்பிடிப்பு, சென்னையில் இருந்து இடம்பெயர்ந்து மலேசியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள ரசிகர் மன்றத்தினர் தங்களது குடும்பத்தாருடன் சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளனர். அப்போது அவர்களுடன் போட்டோ எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். அந்த போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாகியுள்ளன.