ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது வெளியாகும் புகைப்படங்களை வைத்து அவர்களது ரசிகர்களே போஸ்டர்கள் டிசைன் பண்ணி வெளியிடுவார்கள். அது அஜீத், விஜய் படங்களில் நடந்துள்ளது. இந்த நிலையில், கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போகும் 161வது படம் குறித்த போஸ்டர்களை இப்போதே ரஜினி ரசிகர்களை வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.
மேலும், தலைவர் 161 -என்று குறிப்பிட்டுள்ள அந்த போஸ்டரில் கபாலி ரஜினி போன்ற கெட்டப்பில் லுங்கி அணிந்து, பனியன் அணிந்துள்ள ரஜினி, கைகளை கட்டிய நிலையில், தலைகவிழ்ந்தபடி நின்று கொண்டிருக்கிறார். இணையதளங்களை கலக்கிக்கொண்டிருக்கும் இந்த போஸ்டர் ரஜினிதரப்பு கவனத்தையும் ஈர்த்துள்ளது.