சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இயக்குனர் பாலா தன் படத்தில் நடிக்கும் ஹீரோக்களை அந்த கேரக்டராக மாறச் சொல்வார். இதற்காகவே அவர் படத்தில் நடிக்க ஹீரோக்களுக்கு அச்சம் இருக்கும். தற்போது ஜோதிகா நடிப்பில் நாச்சியார் படத்தை இயக்கி வரும் பாலா அடுத்து இயக்கப்போகும் படத்தில் சாட்டை யுவன் ஹீரோவாக நடிக்கிறார், அதற்காக இப்போதிலிருந்தே அவரை தயார்படுத்தி வருகிறார் பாலா.
பாலா படத்தில் யுவன் புரோட்டா கடையில் வேலை செய்பவராக நடிக்கிறார். இதற்காக புரோட்டோ போட கற்று வருமாறு நாகூருக்கு அனுப்பி வைத்தார் பாலா. நாகூரில் உள்ள ஒரு கடையில் ஒரு மாதம் புரோட்டா போட கற்றுத் திரும்பியிருக்கிறார். கடையில் வேலை செய்த யுவனை பார்த்து இந்த பையனை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்றும் பலரும் பேசியிருக்கிறார்கள், ஆனால் தான் யார் என்பதை அவர் சொல்லவில்லையாம்.
இந்த ஒரு மாத பயிற்சியில் வீச்சு புரோட்டா, கொத்து புரோட்டா, நெய் புரோட்டா என எல்லாவிதமான புரோட்டாவும் போடக் கற்றுக் கொண்டிருக்கிறார் யுவன். அடுத்து சண்டை பயற்சி எடுக்க இருக்கிறார். அதாவது எந்த ஆயுதம் இன்றி தாக்கும் சண்டை பயிற்சி. இதற்கான ஏற்பாடுகளையும் யுவனின் தந்தை பெரோஸ்கான் செய்து வருகிறார்.