விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
கேங்க்ஸ்டார், க்யூன், தானு வெட்ஸ் மானு ஆகிய படங்கள் மூலம் தனது நடிப்பு திறமையை காட்டியவர் நடிகை கங்கனா ரனாவத். தனது அதிரடி நடிப்பிற்காக இவர் இரண்டு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.
நடிப்பில் திறமையான நடிகை என பெயரெடுத்துள்ள கங்கனா, தற்போது டைரக்ஷனில் தடம் பதிக்க முடிவு செய்துள்ளார். வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு டைரக்டர் கிருஷ் இயக்கும் மனிகர்னிகா : தி க்யூன் ஆப் ஜான்சி என்ற படத்தில் நடிக்க உள்ளேன். இது ராணி லட்சுமி பாயின் வாழ்க்கை வரலாற்று படம். சுதந்திர போராட்டத்தின் போது அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் பற்றிய படம். இந்த படத்திற்கு பிறகு டைரக்ஷனில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
என் படத்தை நானே இயக்க போகிறேன். அது காமெடி படமாக இருக்கும். வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி, சாதிப்பதே வாழ்க்கையை பூர்த்தி அடைய செய்யும். நடிப்பு, டைரக்ஷன் இரண்டிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.