ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சீனுராமசாமி இயக்கத்தில் நடித்த நீர்ப்பறவை சுனைனாவுக்கு நல்ல நடிகை என்கிற அங்கீகாரத்தைக் கொடுத்தபோதும் அதன்பிறகு அவருக்கு சரியான படங்கள் கிடைக்கவில்லை. கிடைத்த வன்மம், கவலை வேண்டாம் படங்களும் தோல்வியடைந்து சுனைனாவை பின்தள்ளி விட்டன. இருப்பினும், தற்போது சமுத்திரகனியின் தொண்டன் படத்தில் அவரது மனைவியாக நடித்திருக்கும் சுனைனாவின் கேரக்டருக்கும் கதையில் முக்கியத்துவம் உள்ளதாம். குறிப்பாக கதாநாயகி என்கிற வட்டத்தை விட்டு வெளியேறி நல்லதொரு கேரக்டர் நடிகை யாக பர்பாமென்ஸ் கொடுத்து ஸ்கோர் பண்ணியிருக்கிறாராம் சுனைனா.
அதேபோல், தனுஷ் நடிப்பில் கெளதம்மேனன் இயக்கி வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் சுனைனா. இந்த கேரக்டருக்காக சரியான நடிகை வேண்டும் என்று தேடி வந்த கெளதம்மேனன், எதேச்சையாக ஒருநாள் தொண்டன் படத்தின் போஸ்டர்களின் சுனைனாவை பார்த்திருக்கிறார். அதையடுத்து, உடனடியாக சுனைனாவை ஒப்பந்தம் செய்து விட்டாராம். ஆக, கவலை வேண்டாம் படத்தில் நடித்து தன்னை டம்மி பண்ணி விட்டதாக பீல் பண்ணி வந்த சுனைனா இப்போது தொண்டன், என்னை நோக்கி பாயும் தோட்டா என இரண்டு பெரிய டைரக்டர் களின் படங்களில் நடித்திருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் காணப்படுகிறார்.