ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு.. இவரது குடும்பத்தில் இருந்து அடுத்த நபராக சினிமாவில் களம் இறங்கியுள்ளவர் மகேஷ்பாபுவின் தங்கை மஞ்சுளா தான். கடந்த வருடமே தான் சினிமாவில் டைரக்சன் துறையில் நுழைந்துவிட்டேன் என அறிவித்த மஞ்சுளா தனது படத்தின் ஹீரோவாக சந்தீப் கிஷனை அறிவித்தார். தற்போது இந்தப்படத்தின் கதாநாயகியாக அமைரா தஸ்தூர் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஆனாலும் மஞ்சுளாவின் முதல் சாய்ஸ் ஆக இருந்தது 'பிரேமம்' புகழ் மலர் டீச்சரான சாய் பல்லவி தானாம்.. ஆனால் நானியுடன் இணைந்து நடிக்கும் 'எம்.சி.ஏ' என்கிற படத்தில் நடிப்பதற்காக தேதிகளை ஒதுக்கி கொடுத்துவிட்டதால் இந்தப்படத்தில் அவரால் நடிக்க இயலாமல் போய்விட்டதாம். அதன்பின்னரே அமைராவை செலக்ட் பண்ணினாராம் மஞ்சுளா.. இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிட இருக்கிறாராம் மஞ்சுளா.