‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கலையரசன் நடித்துள்ள காலக்கூத்து, எய்தவன், சைனா, பட்டினப்பாக்கம் படங்கள் வெளிவர வேண்டியுள்ளது. களவு படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் உரு என்ற படத்திலும் நடித்து முடிதுள்ளார் கலையரசன்.
இதில் அவர் எழுத்தாளராக நடிக்கிறார். ஒரு காலத்தில் பிசியாக இருந்த எழுத்தாளருக்கு மார்கெட் டல்லடிக்கிறது. இதனால் பேய் கதை எழுதி சம்பாதிக்க நினைக்கும் அவர் அதற்காக மேக மலையில் உள்ள அடர்ந்த காட்டுக்குச் செல்கிறார். அங்கு உட்கார்ந்து கதை எழுதினால் அவர் எழுதும் காட்சிகள் மறுநாள் நிஜத்தில் நடக்கிறது. இப்படி போகிற கதை. இந்தப் படம் பேய் படம்தான் என்றாலும் பேய் எதுவும் கிடையாதாம் அப்படியொரு வித்தியாசமான திரைக்கதை என்கிறார் இயக்குனர் விக்கி ஆனந்த்.
இதில் தன்ஷிகா, மைம்கோபி, டேனியல், கார்த்திகா நடிக்கிறார்கள். ஜோகன் இசை அமைக்கிறார், பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேகமலை மற்றும் கொடைக்கானலில் 32 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் வெளிவர இருக்கிறது.