விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தமிழ்த் திரையுலகத்தில் 'காப்பி' இயக்குனர்கள் என சிலரைச் சொல்லலாம். யு டியூப் காலத்திற்கு முன்பெல்லாம் எந்த ஹாலிவுட் படத்திலிருந்து காப்பியடித்தார்கள் என்பதை அவ்வளவு சீக்கிரத்தில் கண்டுபிடிக்க முடியாது. அப்படியும் ஒரு சிலர் கண்டுபிடித்து வெளியில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்த டிஜிட்டல் யுகத்திலோ படத்தின் முதல் பார்வை வெளியிட்ட உடனே கூட அந்தப் படத்தின் காப்பி என்பதை சொல்லிவிடுகிறார்கள்.
மற்ற இயக்குனர்களாவது வெளிநாட்டு மொழித் திரைப்படங்களிலிருந்து காப்பியடிப்பார்கள். ஆனால், அட்லீ போன்ற இயக்குனர்கள் இதற்கு முன் வெளிவந்த தமிழ்ப் படங்களிலிருந்தே கதையைக் காப்பியடித்து படமாக்கியிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைப் பார்த்து கோடம்பாக்கத்தில் நல்ல கதைகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் உதவி இயக்குனர்கள் வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் எந்த ஒரு விவரமும் வெளியாகாமல் இருந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இந்தப் படத்தில் விஜய் மூன்று தோற்றங்களில் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “ஜோசப், சலீம், மருது” ஆகிய கிறிஸ்துவ, முஸ்லிம், இந்துப் பெயர்களுடன் நடிக்கிறார் என உறுதியற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்லீ இதற்கு முன் இயக்கி வெளிவந்த 'ராஜா ராணி' படம் 'மௌனம் ராகம்' படத்தின் காப்பியாகவும், 'தெறி' படம் 'சத்ரியன்' படத்தின் காப்பியாகவும் வெளிவந்தன. அந்த விதத்தில் தற்போது எடுத்து வரும் புதிய படங்களின் கதாபாத்திரப் பெயர்களை வைத்துப் பார்க்கும் போது, இதற்கு முன் அதே மாதிரியான தோற்றங்களில் ஒரு நாயகன் நடித்து வெளிவந்த படம் 'உதவிக்கு வரலாமா'.
கார்த்திக், தேவயானி, சங்கீதா, அஞ்சு அரவிந்த் மற்றும் பலர் நடித்து 1998ம் ஆண்டு வெளிவந்த படம் 'உதவிக்கு வரலாமா'. இந்தப் படத்தில் கார்த்திக், “முத்தரசு, ஹுசைன், ஜேம்ஸ்” என்ற தோற்றத்தில் நடித்திருப்பார். இதற்கு முன் வெளிவந்த தமிழ்ப் படங்களின் உதவியுடன் தான் அட்லீ படங்களை இயக்கியிருக்கிறார். அப்படிப் பார்த்தால் 'உதவிக்கு வரலாமா' படத்தின் கதையை உதவிக்கு ஏன் எடுத்திருக்க மாட்டார் ?.