ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக திரையுலகில் புதியவர்கள் யாரேனும் நல்ல படங்களை தரும்போது பிரபலமாக இருப்பவர்கள் அதை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் வாழ்த்துக்கள் சொல்வது வழக்கம் தான்.. அந்தவகையில் நம் சூப்பர்ஸ்டார் ரஜினி வருடத்திற்கு ஐந்து படங்களுக்காவது பாராட்டுக்களை வழங்கி வருகிறார்.. ஆனால் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலோ இதற்கு முற்றிலும் நேர்மாறானவர்.. கடந்த சில வருடங்களை எடுத்துக்கொண்டால் புதியவர்கள் பங்களிப்பில் உருவாகிய எந்தப்படத்தையும் அவர் பாராட்டியதில்லை.. இதற்கு எந்த உள்நோக்கமும் இல்லைதான்.. அப்படி பாராட்டினால் அதுவே தொடர்கதையாகி விடும் என நினைத்தாரோ என்னவோ..?
ஆனால் கடந்த வாரம் லிஜோஜோஸ் பள்ளிசேரி என்பவர் இயக்கத்தில் உருவான 'அங்கமாலி டயரீஸ்' படத்தை பார்த்த மோகன்லால் படம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பாராட்டி எழுதியுள்ளார்.. ஏற்கனவே படம் ஹிட்டான நிலையில் மோகன்லாலின் பாராட்டும் சேர்ந்துகொண்டதால் உற்சாகத்தில் இருக்கின்றனர் படக்குழுவினர். இந்தப்படத்தின் இயக்குனர் ஏற்கனவே சில படங்களை இயக்கியவர் என்றாலும் இந்தப்படத்தை கிட்டத்தட்ட 85 புதுமுகங்களை வைத்து உருவாக்கியுள்ளார் என்பதும், உண்மைக்கு பக்கத்தில் நின்று கதைசொல்லி இருக்கிறார் என்பதும் தான் மோகன்லாலை பாராட்டவைத்துள்ளது.