Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகுமார் குடும்பத்தினருக்கு ஜோக்கர் கொடுத்த ஆறுதல்

07 மார், 2017 - 17:25 IST
எழுத்தின் அளவு:
Joker-selected-as-best-film-in-NTFF

யார் கண் பட்டதோ தெரியவில்லை.... சிவகுமார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எடுத்த படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக தோல்வியடைந்து வருகின்றன. ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் என்ற பேனரில் எடுக்கப்பட்ட ஜோக்கர், காஷ்மோரா இரண்டு படங்களும் நஷ்டத்தை ஏற்படுத்தின. ஸ்டுடியோ க்ரீன் பேனரில் தயாரிக்கப்பட்டு கடைசியாக வெளியான சி-3 படமும் தமிழக அரசியல் சூழலால் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை.


சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளிவந்த 36 வயதினிலே, 24, பசங்க-2 போன்ற படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றாலும் வசூல் பெரிதாக இல்லை. இந்நிலையில் பொடென்ஷியல் பிக்சர்ஸ் என்ற பேனரில் மாநாகரம் படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்துக்கு நல்ல டாக் இருக்கிறது. வரும் வெள்ளியன்று படம் ரிலீஸாக உள்ளது.


தொடர்ந்து அடி மேல் அடி பட்டு வரும் சிவகுமார் குடும்பத்தினருக்கு, 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவன தயாரிப்பில் வெளியாகி பெரிதும் பேசப்பட்ட 'ஜோக்கர்' படம் நார்வே பிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது சற்றே ஆறுதலான விஷயமாக அமைந்துள்ளது. அத்துடன் ஜோக்கர் படத்திற்கு இசை அமைத்த ஷான் ரோல்டன் சிறந்த இசை அமைப்பாளராகவும் தேர்வாகியுள்ளார். ஏற்கெனவே 'ஜோக்கர்' படத்துக்கு சென்னை சர்வதேச திரைப்பட விழா விருது, விக்டன் விருது போன்ற பல விருதுகள் கிடைத்திருக்கின்றன.


Advertisement
'ஜெயம்' ரவி, ஆர்யா கொடுத்த ஒன்றரை ஆண்டு கால்ஷீட்'ஜெயம்' ரவி, ஆர்யா கொடுத்த ஒன்றரை ... கேரளாவில் 100 தியேட்டர்களில் வெளியாகும் 'காற்று வெளியிடை' கேரளாவில் 100 தியேட்டர்களில் ...


வாசகர் கருத்து (3)

ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
07 ஏப், 2017 - 23:40 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மத்திய சர்க்கார் முதல் மாநில, உள்ளாட்சி அரசு அமைப்பில் உள்ள அசிங்கங்களை எடுத்துரைத்தால் நாம் "ஜோக்கர்" ஆகத் தான் பார்க்கப்படுவோம் இந்த கிறுக்குப்பயலுகளின் இத்துப் போன திரு(ட்டு) நாட்டில். அதை படமாக எடுத்து தைரியமாக வெளியிட்ட திரைப்பட குழுவினருக்கு மிகப்பெரிய பாராட்டுதல். இந்திய ஜனநாயகத்தின் அவலத்தை கோடிட்டு காட்டும் சிறப்பான படம்.
Rate this:
murugan - Newyork,யூ.எஸ்.ஏ
08 மார், 2017 - 09:44 Report Abuse
murugan You are the mega joker
Rate this:
Shanu - Mumbai,இந்தியா
08 மார், 2017 - 02:20 Report Abuse
Shanu இந்த குடும்பம் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். முக்கியமாக இவரது ரெண்டாவது மகன் கார்த்திக். இவர் நடிக்கும் படம் ஓடுவது சந்தேகம் தான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film maayavan
  • மாயவன்
  • நடிகர் : சந்தீப் கிஷன்
  • நடிகை : லாவண்யா திரிபாதி
  • இயக்குனர் :சி.வி. குமார்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  Tamil New Film Oru Kathai Sollatuma
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in