‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தென்னிந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை தெலுங்குத் திரைப்படங்களின் வியாபார வட்டம் மிகவும் பெரியது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டுமல்லாது கர்நாடகாவிலும் பல இடங்களில் தெலுங்குப் படங்கள் திரையிடப்படும். அதே போல் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அதிகமாகத் திரையிடப்படும்.
தமிழ்ப் படங்களை விட தெலுங்குப் படங்களில் அதிக தியேட்டர்களில் வெளியாவது வழக்கமான ஒன்று. ஆனால், 'பாகுபலி' படத்தைத் தவிர வேறு எந்தத் தெலுங்குத் திரைப்படங்களும் ரஜினிகாந்த் நடித்து வெளிவரும் தமிழ்ப் படங்களின் சாதனையை நெருங்க நிறையவே போட்டி போடுகின்றன.
தென்னிந்திய அளவில் அதிக வசூலை அள்ளிய படமாக 2015ல் வெளிவந்த 'பாகுபலி' படம் 2010ல் வெளிவந்த 'எந்திரன்' பட வசூலை முறியடித்து முதலிடத்தைப் பிடித்தது. அதுவரை 'எந்திரன்' படம்தான் 280 கோடி அளவில் வசூலில் முதலிடம் பிடித்த படமாக இருந்தது. 2015ல் வெளிவந்த 'பாகுபலி' 580 கோடி அளவில் வசூலித்து தற்போது வரை முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை 'பாகுபலி 2' படம் முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு டோலிவுட் வட்டாரத்தில் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'கைதி நம்பர் 150' படம் சுமார் 160 கோடி வசூலித்ததாக செய்திகள் வெளியானது. சிரஞ்சீவி ஒரு இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த இந்தப் படத்தின் வசூல் 'பாகுபலி' அல்லாமல் அதிக வசூலை அள்ளிய தெலுங்குப் படம் என்ற இடத்தைப் பிடித்துள்ளது. இருந்தாலும் ரஜினிகாந்தின் 'எந்திரன்' வசூலை நெருங்கவில்லை.
தமிழில் 'எந்திரன், கபாலி, ஐ, லிங்கா, சிவாஜி' ஆகிய படங்கள் 150 கோடி வசூலைக் கடந்த படங்களாக உள்ளன. ஆனால், தெலுங்கைப் பொறுத்தவரையில் பாகுபலியை தவிர்த்து 'கைதி நம்பர் 150, மகதீரா' ஆகிய படங்கள் மட்டுமே 150 கோடி வசூலைக் கடந்துள்ளன.
தென்னிந்திய அளவில் அதிக வசூலை அள்ளும் நடிகராக ரஜினிகாந்த் தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.