ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இமேஜ் என்கிற வட்டத்திற்குள் சிக்காமல் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருபவர் விஜயசேதுபதி. அதோடு, புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் தற்போது நடித்துள்ள விக்ரம் வேதா படத்தில் அவர் ஒரு தாதா வேடத்தில்தான் நடித்திருக்கிறார். அவரை சட்டத்தின் முன்பு நிறுத்தும் போலீசாக மாதவன் நடித் துள்ளார். ஆனால் விஜயசேதுபதி எதற்காக தாதாவாக உருவெடுத்தார் என்பது படு செண்டிமென்டாக படமாக்கப்பட்டுள்ளதாம்.
அந்த வகையில், இந்த படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடி நடிகை இல்லையாம். அதேசமயம் ஒரு தம்பி கேரக்டர் உள்ளதாம். அந்த தம்பியாகத்தான் கிருமி கதிர் நடித்திருக்கிறார். அந்தவகையில், தம்பியுடன் நடிக்கும் காட்சிகளில் அதிக பாசமான அண்ணனாக உருகி உருகி நடித்திருக்கிறாராம் விஜயசேதுபதி. அதனால் பாசக்கார அண்ணனாக அவர் பாசமழை பொழிந்துள்ள காட்சிகள் தியேட்டரில் பெரிய அளவில் கைதட்டலை பெறும் என்கிறார்கள்.