‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஏற்கனவே பல படங்களை தானே தயாரித்து இயக்கி நடித்தவர் அர்ஜூன். தற்போது தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நாயகியாக நடிக்கும் காதலின் பொன்வீதியில் என்ற படத்தை இயக்கி வருகிறார். காதலை மையமாகக்கொண்டு உருவாகும் இந்த படத்தில் சாந்தன்குமார் என்ற புதியவர் நாயகனாக நடிக்கிறார். அவர்களுடன் சுகாசினியும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படம் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது.
மேலும், தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நடித்த முதல் படமான பட்டத்து யானை பெரிதாக வெற்றி பெறாத நிலையில், இந்த படத்தை எப்படியேனும் வெற்றிப்படமாக்கி விடவேண்டும் என்று ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கிக்கொண் டிருக்கிறார் அர்ஜூன். அந்த வகையில், தற்போது காதலின் பொன்வீதியில் படத்தின் வசன காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்து விட்ட அவர், அடுத்தபடியாக ஒரு பாடல் காட்சியை பெங்களூரில் படமாக்கிவிட்டு, அதற்கடுத்து இன்னொரு பாடலை படமாக்க வெளிநாடு செல்கிறாராம்.
ஆக, மீடியம் பட்ஜெட்டில் படமாக்க வேண்டும் என்று திட்டமிட்ட இந்த படம் இப்போது பிரமாண்ட படமாகி விட்டதாம். மேலும், காதலின் பொன்வீதியில் படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ள அர்ஜூன், கன்னடத்தில் இப் படத்தை பிரேம பரஹா என்ற பெயரில் வெளியிடுகிறார்.