Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டுமான பணி தொடங்கியது

02 ஜன, 2017 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Sivajis-Manimandapam-works-begins

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த பிறகு அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா 2002ம் ஆண்டு சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில் 62 செண்ட் நிலம் ஒதுக்கி கொடுத்தார். தாங்களே மணி மண்டபத்தை கட்டிக் கொள்வதாக அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்கம் அதற்கு பூமி பூஜையும் நடத்தியது.


அடையாறு சாலையில் இருந்து மணிமண்டபம் கட்டப்படும் இடத்திற்கு இணைப்பு சாலை அமைக்க 4 லட்சம் செலவாகும் அதை முதலில் அமையுங்கள் என்று அரசு சொன்னது. அதற்கு நடிகர் சங்கம் எங்களால் அவ்வளவு செலவு செய்ய முடியாது இரண்டு லட்சம் தருகிறோம் என்றது. அதனால் கூடுதலாக இரண்டு லட்சத்தை அரசே செலவு செய்து இணைப்பு சாலை அமைத்தது.


அதன்பிறகு சிவாஜி மணிமண்டம் அமைக்க நடிகர் சங்கம் ஒரு துரும்பைகூட அசைக்கவில்லை. சிவாஜி ரசிகர் மன்றம் உள்ளிட்ட பல அமைப்புகள் இதற்கான போராட்டங்களை நடத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அரசே சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டும் என்று அறிவித்து அதற்காக 2கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கினார்.


இந்த பட்ஜெட்டுக்கு சிவாஜி மணிமண்டபம் பிரமாண்டமாக கட்ட முடியாது. அதனால் பொதுப்பணித்துறை 9 செண்ட் இடத்தில் 2 ஆயிரத்து 124 சதுர அடியில் மணிமண்டபம் கட்டும் பணியை தொடங்கி உள்ளது. இந்த மணி மண்டபம் நான்கு வாயில்களை கொண்டதாக இருக்கும். அதன் நடுவில் உள்ள மாடத்தில் தற்போது மெரீனா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை வைக்கப்படுகிறது. பக்கவாட்டில் சிவாஜி வரலாற்றை சொல்லும் புகைப்பட கண்காட்சி வைக்கப்படுகிறது. உள்ளே அமையும் கல்வெட்டில் சிவாஜி நடித்த படங்களில் பட்டியல் பொறிக்கப்படுகிறது மணி மண்டபத்தை சுற்றி புல்வெளி மைதானமும், வாகன நிறுத்தமும் கட்டப்படுகிறது. நடிகர் சங்கம் தன் பங்கிற்கு என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை. (மேலே உள்ள படம் சிவாஜி மணிமண்டபத்தின் மாதிரி வரைபடம்)


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in