காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! | பின்னணி குரல் கொடுத்த கார்த்திக்கு நன்றி தெரிவித்த '3பிஹெச்கே' இயக்குனர் | 'டைட்டானிக்' ரிலீஸ் : தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைக்கும் கலையரசன் | 2025ன் அரையாண்டில் தமிழ் சினிமா வசூல் எவ்வளவு? |
வேலாயுதம் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் தங்க மோதிரம் மற்றும் சங்கிலி பரிசளித்துள்ளார் நடிகர் விஜய். ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் படம் வேலாயுதம். ஜெயம் ராஜா இயக்கியுள்ள இப்படம், இந்த தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. படம் ரிலீசாக இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தை முழுசாக பார்த்த விஜய், ரொம்பவே திருப்தி தெரிவித்தாராம். அதை வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லாமல், படத்தில் பணியாற்றிய அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் ஒரு தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் பரிசாக அளித்து அவர்களை குஷிப்படுத்தியுள்ளாராம்.