ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவர் என்றால் அது டி.ராஜேந்தர் தான். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், பாடகர்... என சினிமாவில் அவர் தொடாத விஷயங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்திலும் கால்பதித்தவர். டி.ராஜேந்தரின் அநேக படங்கள் குடும்ப உறவுகளை மையப்படுத்தியும், கல்லூரி காதலை மையமாக வைத்தும் உருவாகியிருக்கும். அப்படி அவர் இயக்கிய படங்கள் தமிழ் சினிமாவில் சூப்பர்-டூப்பர் ஹிட்டாகின. டி.ராஜேந்தர் கடைசியாக வீராசாமி என்ற படத்தை இயக்கினார். அதன்பின்னர் படங்களை இயக்காமல் இருந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு படங்களை இயக்க இருப்பதாக செய்தி வெளியானது, ஆனால் அந்த செய்தி, வெறும் செய்தியாக மட்டுமே இருந்தது.
இந்நிலையில் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கத்தில் இறங்கியுள்ளார் டி.ராஜேந்தர். தற்போது அவர் கைவசம் இரண்டு கதைகள் உள்ளதாம். அதில் ஒன்று கல்லூரி காதல் கதையை மையமாக வைத்து உள்ளதாகவும், முதலில் கல்லூரி காதல் கதையை இந்தக்காலத்து ஏற்றபடி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, விஜய்சேதுபதியுடன் 'கவண்' படத்தில் நடித்து வரும் டி.ராஜேந்தர், அந்த படம் முடித்ததும், தனது படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.