'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
ஹிந்தி திரையுலகில் முன்னணியில் இருக்கும் இளம் நடிகர்களில் ரன்வீர் சிங்கும் ஒருவர். இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் ‛பெபிகர்'. ரன்வீர்சிங், வாணிகபூர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். லிவ் இன் லிலேசன்ஷிப் மற்றும் இளைஞர்களை கவரும் விதத்தில் ‛பெபிகர்' படம் படமாக்கப்பட்டுள்ளது. ‛பெபிகர்' படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.34 கோடி வசூலித்து இருக்கிறது. முதல் நாளில் படம் ரூ.10.36கோடியும், இரண்டாம் நாளில் ரூ.11.60 கோடியும் மூன்றாம் நாளில் ரூ.12 கோடியும் வசூலித்து இருக்கிறது.
ரன்வீர் படங்களின் வரிசையில் , ராம் லீலா படம் முதல்வாரத்தில் 51.49 கோடியும், பாஜிராவ் மஸ்தானி படம் முதல் வாரத்தில் 46.77 கோடியும் வசூலித்தது. இந்த இரண்டு படங்களின் வசூலோடு ஒப்பிடுகையில் பெபிகர் படத்தின் வசூல் குறைவு தான். இருந்தாலும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ‛பெபிகர்' படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் படத்தின் பட்ஜெட்டை விரைவில் எட்டும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். ‛பெபிகர்' படம் ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.