'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
‛பாஜிராவ் மஸ்தானி' படத்தை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் படம் ‛பத்மாவதி'. ஷாகித்கபூர், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். ராணி பத்மாவதியாக தீபிகாவும், அவரது கணவராக ஷாகித் கபூரும் நடிக்கிறார்கள். படத்தில் தீபிகாவும், ஷாகித்தும் கணவன்-மனைவியாக நடித்தாலும் அவர்களுக்குள் நெருக்கமான காட்சியோ, முத்தக்காட்சியோ எதுவும் கிடையாதாம். முன்னதாக அதுபோன்ற காட்சிகள் இருப்பதாக இயக்குநர் சொல்லியிருக்கிறார். ஆனால், ஷாகித் அதை நிராகரித்து விட்டாராம். ஷாகித்தின் மனைவி மிராவிற்கு ஷாகித் நெருக்கமான காட்சியில் நடிப்பது பிடிக்கவில்லையாம், அதன்காரணமாக ஷாகித் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிது. பத்மாவதி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் துவங்குகிறது. படம் அடுத்தாண்டு நவ., 17-ம் தேதி ரிலீஸாக உள்ளது.