'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக நிதி திரட்ட ஜஸ்ட் கிரிக்கெட் என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. கடந்த மாதம் 27ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இதன் இறுதி போட்டி நேற்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்தது.
இதில் திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மற்றும் இயக்குனர்கள் வி.இசட்.துரை, மீரா கதிரவன் ,நடிகர்கள் ஷாம்,பரத், ஸ்ரீகாந்த், பிரசன்னா, நரேன், போஸ் வெங்கட், ரமணா, அசோக், சந்தோஷ், பிரஜன், கோலிசோடா கிஷோர், மாஸ்டர் மகேந்திரன், தீனா மற்றும் நடிகைகள் சினேகா, சங்கீதா , தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் . மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் "சென்னை 28" படக்குழுவும், பழைய வண்ணாரப்பேட்டை படக்குழுவும், விழித்திரு படக்குழுவும் கலந்து கொண்டு போட்டியை உற்சாகப்படுத்தினர்.
இந்நிகழ்வில் சினேகாவும் பங்கேற்று கிரிக்கெட் விளையாடி வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தினார். இயக்குனர் வெங்கட் பிரபுவும் அவரது சென்னை 28 படக்குழுவும் வெற்றிபெற்ற எப்சிசி அணியோடு கிரிக்கெட் விளையாடினார். அனைத்து பிரபலங்களும் இணைந்து ரூபாய் 25 ஆயிரத்துக்கான முதல் பரிசை வழங்கினர். இரண்டாம் பரிசை சீ ஹார்ஸ் அணியும் தட்டிச் சென்றது. அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர்கள் ஆர்.கே.சுரேஷ், நாசர் அலி ஆகியோர் செய்திருந்தனர்.