டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஷாரூக்கான் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛ரயீஸ்'. ஷாரூக்கான் ஜோடியாக பாகிஸ்தான் நடிகை மகிரா கான் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே, ‛ரயீஸ்' படத்தில் பாகிஸ்தான் நடிகை நடித்திருப்பதால் இப்படத்திற்கு எதிர்ப்பு எழும் என்று கூறப்படுகிறது.
இந்தச்சூழலில் நடிகர் ஷாரூக்கான், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்ரேயை திடீரென சந்தித்து ரயீஸ் படம் தொடர்பாக பேசினார். அப்போது ஷாரூக், ராஜ்தாக்ரேயிடம், பாகிஸ்தான் நடிகை மகிரா கண்டிப்பாக இந்தியா வந்து படத்தை புரொமோட் செய்ய மாட்டார். வருங்காலத்தில் எனது படங்களிலும் பாகிஸ்தான் நடிகர்கள் பணியாற்ற மாட்டார்கள் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்தாக்ரே... ‛‛மகிரான்கான், ரயீஸ் படத்தை புரொமோட் செய்ய மாட்டார் என்று ஷாரூக் தெரிவித்தார். எனவே எம்என்எஸ்., கட்சி, ரயீஸ் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காது'' என்று தெரிவித்துள்ளார்.