'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
நடுநிசி நாய்கள் படத்தில் அறிமுகமானவர் அஸ்வின். அதன் பிறகு மங்காத்தா, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பிரியாணி, மேகா, வேதாளம், ஜீரோ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது திரி, தொல்லைக்காட்சி, இது வேதளாம் சொல்லும் கதை படங்களில் நடித்து வருகிறார்.
அஸ்வினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அஸ்வினும் சோனாலி என்ற பெண்ணும் பல வருடங்களாக காதலித்து வந்தார்கள். சோனாலி டெக்ஸ்டைல் டெக்னாலஜி பட்டதாரி. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அஸ்வின் சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறும்படம் இயக்கினார். அதில் நடிக்க தேர்வானவர் தான் சோனாலி. அப்போது ஏற்பட்ட நட்பு காதலாகி தற்போது திருமணத்திற்கு வந்திருக்கிறது. இவர்களது காதலுக்கு இருகுடும்பத்திலும் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் இந்த மாத இறுதிக்குள் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். திருமண வரவேற்பில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.