'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்திற்கு இன்று(டிச.,12-ம் தேதி) 66வது பிறந்தநாள். முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ஏற்கனவே ரஜினி அறிவுறுத்தியிருக்கிறார். இருந்தாலும் அவரது அதிதீவிர ரசிகர்கள் பேஸ்க்புக், டுவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். பாரத பிரதமர் நரேந்திர மோடியிலிருந்து, திமுக.,வின் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பல்வேறு திரைநட்சத்திரங்களும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ரஜினி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். அவர் நடித்த ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு விதமான ரசனை உடையது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான படங்கள் பிடிக்கும். ரஜினியின் படங்களில் தங்களுக்கு பிடித்த படங்களை திரைபிரபலங்கள் பலர் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு...
ஆர்.ஜே.பாலாஜி : முத்து
சிவி.குமார் : பாட்ஷா
ஆஷ்னா சவேரி : பாட்ஷா
ஈரோடு மகேஷ் : முள்ளும் மலரும்
பிரசன்னா : அண்ணாமலை
ராதா : எங்கயோ கேட்ட குரல்
முனீஷ்காந்த் : தளபதி
சரண்யா பொன்வண்ணன் : நெற்றிக்கண்
செம்மீன் ஷீலா : ஆறிலிருந்து அறுபது வரை
சச்சு : தர்மயுத்தம்
சங்கீதா : தளபதி
குட்டி பத்மினி : மூன்றுமுகம்
கார்த்தி : முள்ளும் மலரும்
கோவை சரளா : தம்பிக்கு எந்த ஊரு
கீர்த்தி சுரேஷ் : ரஜினி சார் நடித்த படங்களில் ஒரு படத்தை என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. எனக்கு பிடித்த படங்களை சொல்கிறேன்... ஆறிலிருந்து அறுபவது வரை, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், அண்ணாமலை, படையப்பா, நெற்றிக்கண், ஸ்ரீராகவேந்திரா.
பார்த்திபன் : முள்ளும் மலரும்
நதியா : எனக்கு மிகவும் பிடித்த படம், நான் அவருடன் சேர்ந்து நடித்த ‛ராஜாதி ராஜா' தான்.