'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் மெரீனா பீச்சில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சார்பில் வடபழனியில் உள்ள நடிகரும், இயக்குனருமான டி.பி.கஜேந்திரனின் ஒட்டலில் நினைவஞ்சலி கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது. சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவர் சிவஸ்ரீ சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர், நடிககைகள் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். முக்கியமாக சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் தான் கலந்து கொண்டார்கள். முன்னணி நடிகர் நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.