'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
ஆரம்ப காலத்தில் வாய்ப்புக்காக போராடிய போது உதவியவர்களை எளிதாக மறந்து விடுவார்கள். ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பவர்கள் தான் சினிமாவில் அதிகம். ஆனால் ரஜினி அப்படி இல்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களுக்கு உதவுவார். மற்றவர்கள் போன்று அதை வெளிப்படுத்திக் கொள்ளமாட்டார். தன்னை வைத்து அதிக படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமனுக்கும், அவரது குழுவினருக்கும் பாண்டியன் படத்தில் நடித்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கைக்கு வழி காட்டினார்.
அதுபோன்ற இன்னொரு படம் அருணாச்சலம். முத்து படத்துக்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ரஜினி, திடீரென அண்ணாமலை சினி கம்பென்ஸ் என்ற புது படக் கம்பெனியை ஆரம்பித்தார். இதன் தயாரிப்பாளர், உரிமையாளர் ரஜினி அல்ல. தன்னை ஆளாக்கிய சிலர் பொருளாதார சிக்கலில் உள்ளதை அறிந்த ரஜினி அவர்களுக்காக ஒரு படம் நடித்துக் கொடுக்க முன்வந்தார். அதற்காக இந்த நிறுவனத்தை தொடங்கினார்.
ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்கள் படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான கலாகேந்திரா கோவிந்தராஜன். ரஜினி படங்களுக்கு தயாரிப்பு நிர்வாக பணியாற்றிய கே.எஸ்.நாகராஜன், பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக்கிய கலைஞானம், ரஜினியின் காளி, கர்ஜனை படங்களை தயாரித்த ஹேம் நாக் பிலிம்ஸ் ஹேம்நாத், ரஜினியின் பால்ய கால நண்பர் கே.விட்டல்ராவின் சகோதரும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பல வழிகளில் ரஜினிக்கு உதவியவருமான கே.முரளிபிரசாத்ராவ், பாபுஜி சகோதரர்கள், சத்யா ஸ்டூடியோ பத்மநாபன், கடும்பொருளாதார நெருக்கடியில் இருந்த வி.கே.ராமசாமி, நடிகை பண்டரிபாய் ஆகியோரை அருணாச்சலம் படத்தின் தயாரிப்பாளராக்கினார்.
1997ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை சுந்தர்.சி.இயக்கினார். ரஜினி ஜோடியாக சவுந்தர்யா நடித்தார். இவர்கள் தவிர ரம்பா, அம்பிகா, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்திருந்தனர். தேவா இசை அமைத்திருந்தார். படம் பெரிய வெற்றி பெற்றது. வந்த லாபத்தை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தார் ரஜினி.