Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் அடங்கி உள்ளது: பிரதமருக்கு கவுதமி மீண்டும் கடிதம்

12 டிச, 2016 - 10:07 IST
எழுத்தின் அளவு:
Jayalalitha-dead-:-Gautami-wrote-another-letter-to-PM

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள உண்மையை கண்டறிந்து வெளியிட வேண்டும் என்று நடிகை கவுதமி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இது அ.தி.மு.க வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல ஊர்களில் அ.தி.மு.கவினர் கவுதமியின் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் கவுதமி மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதனை தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நம்மில் பலருக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று நான் பிரதமரிடம் கேட்ட கேள்வி பலரின் குரலை பிரதிபலிப்பதாகும். ஜெயலலிதாவின் தொண்டர்கள், விசுவாசிகளின் கேள்வியாகும். இப்போது அவர்கள் என்னுடன் சேர்ந்து கேள்வி எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள். எங்களுக்கு தேவை கேள்விக்கான விடை. என்ன நடந்தது என்கிற உண்மை. இந்த விஷயத்தில் வெளியில் தெரியாத பல மர்மங்கள் உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள எங்களின் மனவேதனை நீங்க உண்மை தெரிய வேண்டியது அவசியம். இதற்காக குரல் எழுப்பியதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.


விடைகேட்டு குரல் எழுப்பும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது. உண்மைய அறிதலும், பெறுதலும்தான் நமக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பையும் தரும். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பிரதமரின் பதிலுக்காக காத்திருக்கிறோம். உங்களிடமிருந்து பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இவ்வாறு கவுதமி கடிதம் எழுதியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in