ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஆலியாபட் முன்னணியில் இருக்கிறார். தற்போது இவர், இயக்குநர் கவுரி ஷிண்டே இயக்கத்தில், ‛டியர் ஜிந்திகி' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் குடிசைப் பகுதியில் இருக்கும் குழந்தைகளுக்காக நடத்திய குழந்தை தின நிகழ்ச்சியில் ஆலியா பட் பங்கேற்றார். அப்போது அவர் தனக்கு வைத்த பட்டப்பெயரை மகிழ்ச்சியுடன் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டார்.
இதைப்பற்றி ஆலியா மேலும் கூறியதாவது....." நான் குழந்தையாக இருந்த போது குண்டாக தான் இருப்பேன், என்னை என் நண்பர்கள் எல்லோரும் செல்லமாக ‛ஆலு' (உருளைக்கிழங்கு) என்று தான் கூப்பிடுவார்கள்" என்றார்.
ஆலியா பட் தற்போது நடித்துள்ள ‛டியர் ஜிந்திகி‛ படம், இந்த மாதம் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.