முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
பாலிவுட்டில் இருக்கும் இளம் முன்னணி ஹிரோயின்களில் ஸ்ரத்தா கபூரும் ஒருவர். தற்போது ஸ்ரத்தா ‛ராக் ஆன் 2' படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் ஸ்ரத்தா, பாலிவுட்டில் இருக்கும் மூன்று கான் நடிகர்களுடன் நடிப்பது என் கனவு என்றார்.
இதைப்பற்றி ஸ்ரத்தா கூறியதாவது...."யாருக்கு தான் ஷாரூக் கான், அமீர்கான், சல்மான்கானுடன் நடிக்க ஆசை இருக்காது.மூன்று கான் நடிகர்ளுடன் நடிப்பது என் கனவு. இவர்கள் மூவரும் பாலிவுட்டின் தலை சிறந்த நடிகர்கள். கான்களோடு நடித்தால் என் புகழ் இன்னும் எல்லாருக்கும் தெரியவரும். மூன்று கான்களின் படத்தில் எனக்கு எந்த வேடம் கொடுத்தாலும் நான் நடிப்பேன், அதேசமயம் படத்தில் எனது ரோல் முக்கியமான வேடமாக இருந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்" என்றார்
ஸ்ரத்தா தற்போது நடித்துள்ள ‛ராக் ஆன் 2' படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது.