Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் அடுத்த படம் நவம்பர் 11ல் ஆரம்பம்

14 அக், 2016 - 10:05 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyans-next-movie-to-be-start-on-Nov-11

24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த 'ரெமோ' படம் கடந்த வாரம் வெளிவந்த வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் அறிமுக விழாவின் போதே அடுத்தடுத்து சில புதிய படங்களை அறிவித்தார்கள். அதில் இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட படம் மோகன் ராஜா இயக்கும் படம். கடந்த சில மாதங்களாகவே இப்படத்திற்கான கதை விவாதம் நடந்து வந்தது. 'ரெமோ' படத்தின் வேலைகளை முடிந்த பின் இந்தப் புதிய படத்தை ஆரம்பிக்க உள்ளார்கள் என்றும் தகவல் வெளியானது.


சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ள இந்த புதிய படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மலையாளத்தின் முன்னணி நடிகரான ஃபகத் பாசில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி, ரோகிணி ஆகியோரும் நடிக்கிறார்கள். மோகன்ராஜா இயக்கும் படத்திற்கு அனிருத் முதன்முறையாக இசையமைக்கிறார். 'தனி ஒருவன்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மோகன்ராஜா இயக்க உள்ள படம் இது.


இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 11ம் தேதி ஆரம்பமாகும் என தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டு அல்லது கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in