மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் லிங்குசாமி இயக்கும் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்குகிறது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போது தமிழில் விஜய் ஜோடியாக பைரவா, சிவகார்த்திகேயன் ஜோடியாக ரெமோ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நீனு சைலஜா படத்தில் நடித்தவர் தற்போது நீனு லோக்கல் ஐன இஷ்டம் நவ்வு படத்தில் நடித்து வருகிறார். கீர்த்திக்கு இது தெலுங்கில் 4வது படம். ரெமோ படத்தை முடித்து கொடுத்துவிட்ட கீர்த்தி பைரவா படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கு இடையில் இன்னும் சில படங்களில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். தனது சொந்த மொழியான மலையாளத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் கீர்த்தி.