ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சென்னை: கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த படமான எம்.எஸ் தோனி என்னும் படம் தமிழில் விரைவில் வெளிவர உள்ளது. வரும் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்காக சென்னையில் நடந்த பத்தரிகையாளர்கள் சந்திப்பில் தோனி கலந்து கொண்டார். தொடர்ந்து மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினியை சந்தித்தார். சந்திப்பின் போது ரஜினிக்கு சால்வை தந்து வாழ்த்து கூறினார். தன்னுடைய பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.தோனிபடம் குறித்து பேசினார். மேலும் தன்னுடைய வேடத்தில் நடிக்கும் நடிகர் ராஜ்புத்தையும் ரஜினிக்கு அறிமுக்ப்படுத்தினார் தோனி.பின்னர் அவர் பேசுகையில் சென்னைக்கு பலமுறை வந்துள்ளேன் இதுவரையில் அவரை பார்க்க முடியாமல் இருந்தது. அவரை சந்தித்தது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது என கூறினார்.