‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா. இயக்குநரான இவர், தனது தந்தை ரஜினியை வைத்து ‛கோச்சடையான்' எனும் 3டி அனிமேஷன் படத்தை மோசன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் படம் எடுத்தார். பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப்படம் சரியாக போகவில்லை. தற்போது தனது அடுத்தப்படத்தை இயக்க தயாராகி வருகிறார் செளந்தர்யா.
இந்நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியம், செளந்தர்யா ரஜினிகாந்த்தை, விலங்குகள் நல வாரியத்தின் தூதராக நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை விலங்குகள் நல வாரிய தலைவர் டாக்டர் எஸ்.சின்னி கிருஷ்ணா வெளியிட்டுள்ளார். முன்னதாக இதுதொடர்பாக செளந்தர்யாவிடம், விலங்குகள் நல வாரியம் பேசியிருக்கிறது, அதற்கு அவரும் சம்மதம் சொல்ல இப்போது தூதராகிவிட்டார்.
சமீபத்தில் செளந்தர்யாவின் சகோதரியான ஐஸ்வர்யா தனுஷ், ஐ.நா.வில் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.