ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் அகிரா படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் டோலிவுட்டிற்கு திரும்பியுள்ளார். ஏற்கனவே மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படத்தை இயக்குகின்றார். இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகளை தேடி வந்த முருகதாஸ் இறுதியில் ராகுல் ப்ரீத்தி சிங்கை நாயகியாக ஒப்பந்தம் செய்தார்.
இந்நிலையில் நடிகை நயன்தாராவும் இப்படத்தில் நடிக்க ஆடிசனில் பங்கெடுத்துச் சென்றுள்ளார். நயன்தாராவுக்கென மிகவும் முக்கிய வேடத்தை இயக்குனர் முருகதாஸ் ஒதுக்கியுள்ளதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த கஜினி படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார்.