ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
10 கன்னட படங்களில் நடித்து விட்டு திருடா திருடியில் "மன்மதராசா... மன்மதராசா... என்னை கணக்கு பண்ணாதே..." எனறு தனுஷூடன் செம குத்தாட்டம் போட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சாயாசிங். அதன் பிறகு அம்மா அப்பா செல்லம், வல்லமை தாராயோ, அனந்த புரத்து வீடு, உள்பட பல படங்களில் நடித்தார். திருப்பாச்சி, அருள் படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார். இவர் நடித்த சொல்லி அடிப்பேன் படம் வெளிவரவே இல்லை. இடையில் ஒரு பெங்காலி படத்தை இயக்கவும் செய்தார்.
சினிமா வாய்ப்புகள் குறையவே நாகம்மா என்ற சின்னத்தரை தொடரில் நடித்தார். இது கதிர்வேலன் காதல், உயிரே உயிரே படங்களில் அக்கா அண்ணியாக நடித்தார். இந்தப் படங்கள் சரியான வரவேற்பை பெறாததால் மனம் தளர்ந்திருந்த சாயாசிங் இப்போது உள்குத்து படத்தில் நம்பிக்கையோடு தனது பயணத்தை தொடர்ந்திருக்கிறார். உள்குத்தில் வில்லன் ஜான் விஜய்யின் மனைவியாக நடித்திருக்கிறார். அடுத்த தனுஷ் இயக்கும் பவர்பாண்டி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். உள்குத்து நல்ல பலன் தரும், பவர் பாண்டி நல்ல ஏற்றம் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சாயாசிங்.