ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன் நடித்த தெறி படத்தை அட்லி இயக்கினார். கலைப்புலி எஸ்.தாணு தனது வி.கிரியேஷன் சார்பில் தயாரித்தார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்தார், ஜார்ஜ் ஜி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார். 1500 தியேட்டர்களில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் வெளியான தெறி சில தியேட்டர்களில் 100 நாளை தொட்டது. படம் பற்றி இருவிதமான விமர்சனங்கள் இருந்தாலும் நல்ல கலெக்ஷனை கொடுத்தது. தயரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் லாபம் கிடைத்தது.
தற்போது 4 மாதங்களுக்கு பிறகு தெறி முறைப்படி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே வேதாளம், தூங்காவனம், சேதுபதி, தங்கமகன், ரஜினிமுருகன், உள்பட பல படங்களை வெளியிட்ட ஹீரோ டாக்கீஸ் நிறுவனம் இதனையும் வெளியிட்டுள்ளது. ஆங்கில சப் டைட்டிலுடன் டவுண்ட் லோட் செய்து பார்க்கலாம். 1080பி எச்.டி பிச்சர் குவாலிட்டி, மற்றும் 5.1 ஒலி தரத்தில் கிடைக்கும்.