Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால்-அல்போன்ஸ் புத்ரன் படத்திற்கு புதிய சிக்கல்..!

05 செப், 2016 - 11:32 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-and-alphonse-puthiran-movie-is-again-in-a-issue

மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒப்பம்' படம் வரும் ஓணம் பண்டிகை ரிலீஸாக வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.. காரணம் இந்தப்படத்தின் ட்ரெய்லரை உருவாக்கியது இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.. ஆம்.. 'பிரேமம்' புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தான்.. இதனால் மனம் மகிழ்ந்த மோகன்லால் அல்போன்ஸ் புத்ரனை மனம் விட்டு பாராட்டினார்.. மேலும் அல்போன்ஸ் புத்ரன் டைரக்சனில் நடிக்க மோகன்லாலே விரும்புவதாக தெரிகிறது.. அவருக்கு ஏற்ற ஸ்கிரிப்ட்டுடன் சென்றால் தேதிகள் தர தயாராகவே இருக்கிறாராம் மோகன்லால்..


அப்படி தரும் பட்சத்தில் அந்தப்படத்தை மோகன்லாலின் நண்பரான விமல்குமார் என்பவர் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.. இந்த விமல்குமார் தான் ஜோஷி டைரக்சனில் மோகன்லால் நடித்த 'லோக்பால்' என்கிற படத்தை தயாரித்தவர்.. அந்தப்படம் சரியாக ஒடாமல் நட்டமடைந்ததால், அவருக்கு மீண்டும் ஒரு படம் நடித்து தருவதாக வாக்களித்துள்ளார் மோகன்லால்.. அந்தவகையில் அல்போன்ஸ் இயக்கும் படத்தை விமல்குமாரை தயாரிக்க சொல்லலாம் என்பது மோகன்லாலின் எண்ணம்.


ஆனால் விமல்குமாருக்கு இதில் உடன்பாடு இல்லையாம்.. அல்போன்ஸ் புத்ரன் மீது அவருக்கு எந்த விரோதமும் இல்லை. ஆனால் அல்போன்ஸ் புத்ரனின் மாமனாரும் தயாரிப்பாளருமான ஆல்வின் ஆண்டனிக்கும் விமல்குமாருக்கும் ஏற்கனவே 'வாய்க்கா தகராறு' ஓடிக்கொண்டு இருக்கிறது.. அல்போன்ஸ் புத்ரன் தனது படத்தை இயக்க தொடங்கினால் அதில் அவரது மாமனார் ஆல்வின் ஆண்டனியின் குறுக்கீடுகள் ஏற்படலாம் என்று நினைக்கும் விமல்குமார் இதனை மோகன்லாலிடமும் சொல்லிவிட்டாராம். அதனால் விமல்குமார் தயாரிப்பில் வேறொரு இயக்குனரை வைத்து நடித்துக்கொடுத்துவிட்டு, அல்போன்ஸ் புத்ரனுக்கு வேறு தயாரிப்பாளரை பார்க்கலாம் என முடிவுசெய்துள்ளாராம் மோகன்லால


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in