ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
49 ஓ படத்தை அடுத்து கவுண்டமணி நாயகனாக நடித்து நேற்று வெளியாகியுள்ள படம் ‛எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது'. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் படப்பிடிப்புகளுக்கு கேரவன் வாடகைக்கு விடும் முதலாளியாக நடித்துள்ளார் கவுண்டமணி. தனது வழக்கமான நக்கல் - நய்யாண்டிகளுடன் அவர் நடித்துள்ள இந்த படத்தில் நாயகன், காமெடியன் இரண்டுமே கவுண்டமணியே தான்.
மேலும், இந்த படம் தொடங்கப்பட்டபோதே, எங்களுக்கு வேறு எங்கும் கிளை கள் கிடையாது என்றொரு படத்தலைப்பும் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனபோதும், அப்போதைக்கு அதுபற்றி கவலைப்படாமல் கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் நேற்று படம் வெளியானபோது, கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது -என்று டைட்டில் மாற்றப்பட்டிருந்தது.
இதுபற்றி அப்பட இயக்குனர் கணபதி பாலமுருகன் கூறுகையில், நாங்கள் இந்த தலைப்பை பிலிம் சேம்பரில பதிவு செய்திருந்தோம். ஆனால் கில்டில் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற தலைப்பை பதிவு செய்திருந்தது இன்னொரு நிறுவனம். அவர்களிடம் பேசிப்பார்த்தபோது அவர்கள் அந்த தலைப்பை விட்டுத்தர முன்வரவில்லை. அதனால், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற தலைப்பில் கவுண்டமணியின் பெயரை இணைத்து படத்தை வெளியிட்டுள்ளோம் என்றார்.