ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'ரெமோ' படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளவர் பாக்கியராஜ் கண்ணன். இயக்குனர் அட்லீயிடம் உதவியாகராப் பணி புரிந்த இவரை 'ரெமோ' படம் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. படத்தை முழுவதுமாக முடித்து திரையிட்டுப் பார்த்ததில் படம் மிகவும் பிரமாதமாக வந்துள்ளதாம். உடனே இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனை அவர்களது நிறுவனத்தில் மீண்டும் ஒரு படத்தை இயக்குவதற்காக இப்போதே அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இந்தத் தகவலை படத் தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டுள்ளது.
அது மட்டுமல்ல, சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களிலேயே 'ரெமோ' தான் சிறந்த படம் என்று சொல்லும் அளவிற்கு படம் வந்துள்ளதாம். கீர்த்தி சுரேஷும் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளாராம். அவருக்கு தமிழ்த் திரையுலகத்தில் ஒரு முக்கிய இடம் காத்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முதல் பட இயக்குனர் போல இல்லாமல் படத்தை மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. அக்டோபர் 7ம் தேதி வெளியாக உள்ள 'ரெமோ' படத்தின் இசை வெளியீடு வரும் 5ம் தேதி நடைபெற உள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள்.
'ரெமோ' படத்தின் வியாபாரம் முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் டீசர், டிரைலர் வெளியீடும் நடைபெற உள்ளது.