‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி வடஇந்தியாவில் இந்தி, பஞ்சாபி மொழிப் படங்களில் நடித்து வருபவர் யாமி கெளதம். தமிழைப் பொறுத்தவரை ராதாமோகன் இயக்கிய கெளரவம் படத்தில் அல்லு சிரிஸ்க்கு ஜோடியாக நடித்தார். பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்த அந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஜெய் நடித்து சமீபத்தில் வெளியான தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார் யாமி.
இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறாராம் யாமி கெளதம். அதனால் சில தமிழ்ப்பட டைரக்டர்களிடம் பட வேட்டை நடத்திவிட்டு இந்தி படத்தில் நடிக்க மும்பை பறந்துள்ள அவர், இந்தி படங்களில் நடிப்பது போன்று அதிரடியான கமர்சியல் நாயகியாக நடிக்கவும் தான் தயாராக இருப்பதாக கோலிவுட் டைரக்டர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார். ஆனால், யாமி கெளதமின் அழகிய சிரிப்பு ரீச்சான அளவுக்கு அவரது பர்பாமென்ஸ் ரீச்சாகாததால் அவரது பெயரை இன்னும் பரிசீலனையிலேயே வைத்திருக்கிறார்கள் டைரக்டர்கள்.